Answered by Ansar Thablighi
|
வினா
நான் ரமழானில் விடுபட்ட களா நோன்பை பிடிக்க வேண்டி உள்ளது.
இதற்கிடையில் ஆஸுறா நோன்பு வந்துள்ளது. எனவே களா நோன்பை
நோன்பை நோற்கும் போது ஆஸுறாவின் எண்ணத்தையும் நாடிக்
கொண்டால் இரண்டிற்கும் போதுமானதாகிவிடுமா?
விடை
பர்ளான நோன்பை நோற்கும் சுன்னத்தான நோன்பை நாடுவதும்
அல்லது சுன்னத்தான நோன்பின் போது பர்ளான நோன்பை நாடுவதும்
இரண்டின் நன்மையும் ஈட்டித் தரும் எனக் கூறுவது வெறும்
யூகமேயாகும்.
அதற்கு நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் எந்த செய்தியும்
சொல்லாலோ அல்லது செயலாலோ வந்ததாக எந்த ஆதாரத்தையும் நாம்
காணவில்லை.
எனவே இரண்டு நோன்பையும் தனித்;தனியாக பிடித்தாக வேண்டும்.