



| - - |
| Whatsoever is in the heavens and whatsoever is in the earth glorifies Allah. And he is the All-Mighty, the all_Wise Quran 59:01 |
| தளம் பற்றி |
| வாசகர்களுக்கு ஓர் மடல் அஸ்ஸலாமு அலைக்கும் எங்கள் இணையத்துக்கு பலரால் மின்னஞ்சல் மூலம் கேட்கப்பட்டு வரும் ஒரு கேள்விக்கு நாங்கள் இங்கே பதில் சொல்ல கடமை பட்டுள்ளோம். நாங்கள் எந்த கொள்கை எந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் என்று இனம் காண விரும்புகிறார்கள். எங்கள் இணையம் முற்றிலும் குர்ஆன் ஹதீதுக்கு உட்பட்டது.குர்ஆன் ஹதீத் ஆதாரங்களுடன் யார் ஹக்கை முன்வைக்கிறார்களோ அவர்களுடய ஆக்கங்கள் சொற்பொழிவுகளை நாங்கள் எந்த விதமான துவேஷமும் இல்லாமல் வெளியிடுவோம் அது மட்டுமல்லாமல் இது காலவரையில் உலக மக்களுக்கு அறிமுகமாகாத எங்களுடய இலங்கையில் உள்ள குர்ஆன் ஹதீத் அடிப்படையில் செயலாற்றும் மௌலவிகளுக்கும் எங்கள் இணையத்தில் முன்னுரிமை வழங்குகிறோம். ஒரே கொள்கையில் இருந்து கொண்டு இயக்கங்களாக பிரிந்து ஒரு தரப்பினரை மற்றவர் குறை கண்டு பிரிவு பட்டு மாற்றுக்கொள்கை சகோதரர்களின் நகைப்புக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகிக்கொண்டிருப்பதை தவிர்ந்து கொள்கை சகோதரர்கள் ஒற்றுமையுடன் மக்களை நேர்வழி படுத்தும் முயற்சியை முன்னெடுத்து செல்ல வேண்டுகிறோம். |