
| வாசகர்களுக்கு ஓர் மடல் அஸ்ஸலாமு அலைக்கும் எங்கள் இணையத்துக்கு பலரால் மின்னஞ்சல் மூலம் கேட்கப்பட்டு வரும் ஒரு கேள்விக்கு நாங்கள் இங்கே பதில் சொல்ல கடமை பட்டுள்ளோம். நாங்கள் எந்த கொள்கை எந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் என்று இனம் காண விரும்புகிறார்கள். எங்கள் இணையம் முற்றிலும் குர்ஆன் ஹதீதுக்கு உட்பட்டது. குர்ஆன் ஹதீத் ஆதாரங்களுடன் யார் ஹக்கை முன்வைக்கிறார்களோ அவர்களுடய ஆக்கங்கள் சொற்பொழிவுகளை நாங்கள் எந்த விதமான துவேஷமும் இல்லாமல் வெளியிடுவோம் அது மட்டுமல்லாமல் இது காலவரையில் உலக மக்களுக்கு அறிமுகமாகாத எங்களுடய இலங்கையில் உள்ள குர்ஆன் ஹதீத் அடிப்படையில் செயலாற்றும் மௌலவிகளுக்கும் எங்கள் இணையத்தில் முன்னுரிமை வழங்குகிறோம். ஒரே கொள்கையில் இருந்து கொண்டு இயக்கங்களாக பிரிந்து ஒரு தரப்பினரை மற்றவர் குறை கண்டு பிரிவு பட்டு மாற்றுக்கொள்கை சகோதரர்களின் நகைப்புக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகிக்கொண்டிருப்பதை தவிர்ந்து கொள்கை சகோதரர்கள் ஒற்றுமையுடன் மக்களை நேர்வழி படுத்தும் முயற்சியை முன்னெடுத்து செல்ல வேண்டுகிறோம். |

| இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள் |
| இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள் |
பார்வையாளர்களுக்கு... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்..... இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்களிடத்தே விளக்கவே காலத்துக்குக் காலம் அல்லாஹ் நபிமார்களை பூமிக்கு அனுப்பி வைத்தான். இறுதி நபியாம் முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பிறகு இவ்வுலகில் எந்த நபியும் தோன்றப்போவதில்லை என்பதை நன்கறிந்த ஒரு சில குருட மனம் படைத்த நயவஞ்சகர்கள் இஸ்லாத்தை இவ்வுலக தேவைகளுக்காக அவர்களுக்கு ஏற்ற பாணியில் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றனர். நபி (ஸல்) அவர்கள் எமக்குக் காட்டித்தந்த இஸ்லாம் மறைந்து விடுமோ என்று எண்ணும் அளவுக்கு அவர்களது நூதன செயல்கள் அமைந்து விட்டன. அவை அனைத்தையும் களைந்து நபியவர்கள் கற்றுத்தந்த உண்மையான இஸ்லாம் எதுவென வெளிச்சமிட்டுக்காட்ட ஒவ்வொரு உண்மையான முஃமினும் கடமைப்பட்டிருக்கின்றான். அதனடிப்படையில் நானும் ஓர் முஃமின் என்ற வகையில் அல்குர்ஆன் சுன்னா அடிப்படையில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் விளக்கிட ஓர் இணைய தளத்தை ஆரம்பம் செய்திருக்கிறேன். இதில் குர்ஆன் (அருள் மறை), ஹதீஸ் (நபிமொழிகள்), ஆடியோ, வீடியோ, கட்டுரைகள், பெண்கள் பகுதி போன்ற பல தலைப்புகளில் எங்களின் இஸ்லாமிய வாழ்வுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் மிகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் உங்களுக்குத்தர விழைகிறேன். சுருக்கமாக இது ஓர் இஸ்லாமிய அறிவுக்களஞ்சியமாக உங்களிடம் உலா வரும் என்பதில் ஐயமில்லை. அதற்குத் துணை புரிய வல்ல ரஹ்மானை வேண்டுகிறேன். இதில் குறை காண்போர் ஆதாரத்துடன் எனது கவனத்திற்குக் கொண்டுவந்தால் பரிசீலனை செய்து மகிழ்வுடன் திருத்திக் கொள்ள உதவியாக இருக்கும். இஸ்லாத்தைப் பற்றி இணையம் தரும் குப்பைகளுள் எனது தளம் குர்ஆன் சுன்னாவை கையிலேந்தி வைரமாய் மின்னும் என்ற நம்பிக்கையில் FAHEEM THALIB faheem@srilankamoors.com |
