

01. அல்லாஹ்வுக்குரிய திருநாமங்களைக் கொண்டு அவனை அழைக்காமல் வேறு நாமங்களைக் கொண்டு அல்லாஹ்வை அழைத்தல். 02. சங்கடமான சந்தர்ப்பங்களிலும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வுடைய பண்புகளில் குறைகாணல். 03. அல்லாஹ்வுடைய அருட்களில் நிராசை கொள்ளல். 04. இஸ்லாம் அனுமதித்தவைகளை அனுமதிக்கவில்லை என்றும், அனுமதிக்காதவைகளை அனுமதித்துள்ளது என்றும் கூறுதல். 05. உலக கவர்ச்சிப் பொருட்களில் லயித்துப் போய் அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையில் சந்தேகம் கொள்ளல். 06. யா அல்லாஹ்! நீ நாடினால் என் குற்றத்தை மன்னிப்பாயாக என்று பிரார்த்தனை புரிதல் 07. இவன் எனது அடியான். இது எனது உம்மத் என்று கூறல். 08. அல்குர்ஆனை மாத்திரம் பின்பற்றினால் போதும் அல்ஹதீஸை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என நினைத்தல், கூறுதல். 09. இவர் தான் அரசருக்கெல்லாம் அரசரும் நீதிபதிக்கெல்லாம் நீதிபதி என்றும் கூறல். 10. ஒரு நற்கிரிகையை செய்கின்ற போது மனிதர்களது அன்பையும் ஆதரவையும் மாத்திரம் பெறவேண்டுமென்ற வகையில் முஸ்துதியோடு செயல் படல். 11. நபிகளாரின் பொருட்டையோ அல்லது வேறு பெரியார்கள் பொருட்டைக் கொண்டு எனது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! என துஆக் கேட்டல். 12. ஒரு விடயம் நடந்த பிறகு அதனை இப்படி செய்திருந்தால். இந்த ஆபத்து எனக்கு வந்திருக்காது என்று கூறுதல் அல்லது நினைத்தல். 13. குறிபார்த்தும், நற்சகுணம், துற்சகுணம் பார்த்தும் நல்ல விடயங்களை ஆரம்பித்தல். 14. அல்லாஹ் தடுத்துள்ள மருந்துப் பொருட்களை நோய் நிவாரணியாகக் கொள்ளல். 15. அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் இடம்பெறாத திக்ருகளை புரியாத சமிக்ஞை செய்து திக்ர் செய்தல். 16. அல்லாஹ் நாடியவாறும் நீங்கள் நாடியவாறும் நடந்தது என்று கூறி அல்லாஹ்வின் நாட்டத்தோடு மனிதர்களை இணையாக்குதல். 17. நேர்ச்சை, பலியிடல் போன்ற வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நிறைவேற்றல். 18. நான் உனக்காக அல்லாஹ்விடம் பரிந்து பேசுவேன் என்று கூறுதல். 19. நபிமார்களையும், ரசூல்மார்களையும், நபித்தோழர்களையும் நிந்தித்தல் 20. அன்னியர்களின் வணக்க வழிபாடுகளில் கலந்து சிறப்பித்தல். இன்னும் இவை போன்ற எத்தனையோ அம்சங்கள் எம்முள் புதைந்து கிடக்கின்றன. அவைகளை அகற்றி நபிகளார் காட்டித்தந்த நல் வழியில் வாழப் பழகுவோமாக... |