பத்ர் யுத்தம்

இஸ்லாமிய வரலாற்றில்
முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்
அல்லாதவர்களுக்கும் இடையில் நடைபெற்ற
முதலாவது யுத்தமே பத்ர் என வரலாறு
குறித்துக் காட்டுகின்றது. முஸ்லிம்கள்
சந்தித்த முதல் ரமழானில் மிகக் குறைந்த
எண்ணிக்கையையுடைய ஆயுத பலமற்ற ஒரு
குழுவினர் மிகக் கூடிய எண்ணிக்கையுடைய
ஆயுத பலம் கொண்ட ஒரு குழுவை வெற்றி
கொண்டது வரலாற்றில்
ஈடு இணையற்றதாகும். முஸ்லிம்களது
உறுதியும் அல்லாஹ்வின் உதவியும் இந்த
யுத்தத்தில் முஸ்லிம்கள்
வெற்றியீட்டுவதற்கு காரணங்களாக
அமைந்தன.


பத்ர் யுத்தத்திற்கான
காரணங்கள்

இணைவைப்பாளர்கள் எப்பொழுதும் இஸ்லாம்
அடைந்து வரக்கூடிய முன்னேற்றங்கள்
பற்றி திருப்தியுறவில்லை. நபியவர்கள்
தமது கொள்கையில் வெற்றி
பெறமாட்டார்கள் என்ற சிந்தனையுடன்
தொழிற்பட்ட இணைவைப்பாளர்கள் இஸ்லாம்
போதிக்கப்பட்ட ஆரம்பப் பிரிவிலேயே
தடையாக நின்றனர். நபியவர்கள் ஹிஜ்ரத்
செல்வதைக் கூட அவர்கள் அனுமதிக்க
வில்லை. ஹிஜ்ரத்துக்குப் பின்னர்
நபியவர்கள் இஸ்லாமிய சமூகத்தை இராணுவ
பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையச்
செய்ததனை பார்த்து நபியவர்களை
எதிர்த்து போராட முற்பட்டனர்.
அரபு மக்கள் தாம் வாழ்ந்த மக்கா நகரை
அதிகமாக நேசித்தனர். அரபுலகில்
அதற்கிருக்கும் மதிப்பு அவர்களுக்கு
கௌரவத்தை கொடுத்தது. அங்கு கஃபா
நிர்மானிக்கப்பட்டிருந்தமையும்,
பாதுகாப்புப் பெற்ற ஒரு நகராக அது
அமைந்திருந்தமையும், வர்த்தக சந்தையாக
பிரபல்யம் அடைந்திருந்தமையும்
எல்லோரும் அந்நகரை மதிப்பதற்கும்
தற்போது நபியவர்கள் எடுத்த
நடவடிக்கைகள் காரணமாக இந்நகர்
மதிப்பிழந்து செல்வதனை அவதானித்தனர்.
அத்தோடு தமது கண்ணியமும் இதனால்
இழப்பதைக் கண்டனர். இதுவும் நபியவர்களை
அவர்கள் எதிர்த்துப் போராட இன்னுமொரு
காரணமாய் அமைந்திருந்தது.

மதீனா படிப்படியாக முன்னேற்றம் அடைந்து
வருவதையும் வரலாற்றில் அது இடம்
பெறுவதையும் இணைவைப்பாளர்கள்
அவதானித்தனர். அது மட்டுமல்லாமல்
மக்காவிலிருந்து சிரியா செல்லும்
வர்த்தகப் பாதையை ஊடறுத்து
முக்கியத்தவம் பெற்று வரும் இந்நகரம்
இருப்பதையும் கண்ட அவர்கள்
பொறாமையுற்றனர். இதனால் அந்நகரைத்
தாக்குவதன் மூலமாக தமது நிலைப்பாட்டை
உறுதிப்படுத்திக் கொள்ள அவர்கள்
சிந்தித்தனர்.
நபியவர்கள் தமது ஆதரவாளர்களை திரட்டிக்
கொண்டு மக்கா மீது படையெடுத்து வரலாம்
என்ற அச்சமும் எதிரிகளுக்கு
காணப்பட்டது.
01
02
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள்
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள்
Srilankamoors.com
Srilankamoors.com
Spreading The Truth Of Islam
Spreading The Truth Of Islam
சிறிலங்கா மூர்ஸ்.காம்
சிறிலங்கா மூர்ஸ்.காம்
இஸ்லாம் தூய வடிவில்
இஸ்லாம் தூய வடிவில்
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள்
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள்
Srilankamoors.com
Srilankamoors.com
Spreading The Truth Of Islam
Spreading The Truth Of Islam
சிறிலங்கா மூர்ஸ்.காம்
சிறிலங்கா மூர்ஸ்.காம்
இஸ்லாம் தூய வடிவில்
இஸ்லாம் தூய வடிவில்