
றக்வானை பிரதேசத்தில் தோட்டத்தொழிலாளர்கள் இஸ்லாத்தை ஏற்பு இலங்கையில் றக்வானை பிரதேசத்தில் இஸ்லாத்திற்கு வருபவர்கள் தொகை கனிசமான முறையில் அதிகரித்து வருகிறது.ஆனால் இஸ்லாத்திற்கு வரும் மக்களுக்கு மார்க்கத்தை முறையாகக் கற்பதற்கு எந்தவொரு ஏற்பாடுமில்லை என்ற விடயத்தை அங்குள்ள சகோதரர்கள் எங்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார்கள்.எனவே எங்கள் அமைப்பு IGF (இஸ்லாமிய வழிகாட்டல் அமைப்பு) 2009.08.30 ம் திகதி றக்வானையில் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற மக்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன? அதன் அடிப்படை கொள்கையென்ன? என்பது பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தை வழங்குவதற்காக பயான்,கேள்வி பதில் நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்தது. அம்மக்களுக்கு நோன்பு திறக்கவும் ஏற்பாடு செய்தது.இந்நிகழச்சியில் எமது அமைப்பை சார்ந்த சகோ.நுஸ்ரத் நாளிரும் தலைசிறந்த பேச்சாளரும் உளவியல் ஆலோசகருமான அப்துல் ஹமீத் மவ்லவி அவர்களும் உறையாற்றினார்கள்.அமைப்பின் தலைவர் சகோ.சாதிக் முஹம்மத் அவர்கள் சிற்றுரையாறறினார்.இந்நிகழ்ச்சி இனிதே நடைபெற்றிருப்பினும் அங்கு வந்த மக்களில் அநேகமானோர் மார்க்க அறிவை பெறுவதை விட வேறு ஏதேனும் காசுபொருட்கள் போன்றவற்றை தான் எதிர்பார்த்து வந்திருக்கிறார்கள். இதற்கு தனது சுயலாபத்துக்காகவும் வேறுநோக்கத்துக்காகவும் அங்கு சென்ற அமைப்புக்கள் மார்க்கத்தை கற்றுக்கொடுப்பதை விட்டுவிட்டு அம்மக்களுக்கு காசு பொருட்களை கொடுத்ததே காரணம்.இதில் இன்னொரு கூட்டம் இம்மக்களை காட்டி காசு சம்பாரிப்பது மிக வேதனைக்குரிய விடயமாகும்.இன்ஷா அல்லாஹ் எமது IGF இஸ்லாமிய வழிகாட்டல் அமைப்பு அம்மக்களுக்கு மார்க்க அறிவை கொடுக்க தொடர்ந்தும் பாடுபடும். தகவல் ளுயனஙைபைகளூபஅயடை.உழஅ PHOTOS |

| இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள் |
| இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள் |