Answered by Ansar Thablighi
|
வினா
இரவு வேளைகளில் திருக்குர்ஆனில் சில சூறத்துகளை குறிப்பாக ஒதுவது நபிவழியா?
விடை
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரவிலும் சூறதுஸ் ஸஜ்தாவையும் சூறதுஸ் ஸூமறையும்
ஓதுபவராக இருந்தார்கள் என்ற செய்தி இமாம் அபூயஃலாவிற்குரிய முஸ்னத் எனும்
கிரந்தத்தில் ஆதாரமான அறிவிப்பாளர் வரிசையினூடாக இடம்பெற்றுள்ளது.இதில்
வெளிப்படையான எந்த குறையையும் காணவில்லை.
இதே போண்று இமாம் அஹ்மதிற்குரிய முஸ்னத் என்ற கிரந்தத்தில் பின்வரும்
செய்தி இடம்பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் சூறதுஸ் ஸஜ்தாவையும் சூறதுல் முல்கையும் ஓதும் வரை
தூங்கமாட்டார்கள்.
இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில்; சிலர் விடுபட்டுள்ளதால் இதை
பலயீனமான ஹதீஸ்; என பல இமாம்கள் கூறியுள்ளார்கள்.
என்றாலும் விடுபட்ட அறிவிப்பாளர் உறுதியான அறிவிப்பாளர் என வேறு
அறிவிப்புகளின் மூலம் இனங்காணப்பட்டுள்ளதால் அதனை ஏற்றுக்கொள்ளலாம்
மற்றும் சில இமாம்கள் என கூறியுள்ளனர்.
எனது ஆய்விலும் அதுவே சரியாக தென்படுகிறது.
இதேவேளை முதலாவது ஹதீதிலும் சூறதுஸ் ஸஜ்தா குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால் அதனை ஓதுவது மேலும் உறுதியாகிவிட்டது.( அல்லாஹ்வே மிக அறிந்தவன்)