ஜமாஅத்தே இஸ்லாமி சகோதரர்களே! சிந்திப்பீர்களா?

அல்லாஹ் தஆலாவின் தந்தை என தன் பெயர் முன்னால் பெயர் வைத்துக் கொண்டு கண்மணி
முஹம்மத் (ஸல்) அவர்களையே பொய்யராக்கும்
இத்தகைய ஒரு இமாம் உருவாக்கிய ஜமாஅத்தை பின்பற்றி நரகம் செல்லப் போகிறீர்களா?

அன்பிற்கினிய சகோதரர்களே!

இஸ்லாத்தை அதன் தூயவடிவில் சர்வதேசமெங்கும் பிரச்சாரம் செய்யும் அமைப்பாகிய
தாருல் அதர் அத்தஅவிய்யா பல இயக்கங்களின் வழிதவறிய கொள்கைகள், செயற்பாடுகளை
குர்ஆன் ஸுன்னாவின் அடிப்படையில் மக்களுக்கு தெளிவுபடுத்தி வருவதை நீங்கள்
அறிவீர்கள். எமது நோக்கம் அவ்வியக்கங்களை சார்ந்த சகோதரர்களுக்கு சத்தியத்தை
தெளிவு படுத்துவதே அன்றி எந்தவித தனிப்பட்ட குரோதமோ, வேறு காரணங்களோ கிடையாது.

அந்த பட்டியலில் 'ஜமாஅதே இஸ்லாமியையும்' சேர்த்து நாம் விமர்சித்து வருவதை
மக்களாகிய நீங்கள் நன்கறிவீர்கள். 'இயக்கங்கள் பாதுகாக்கப்படுவது முக்கியமல்ல
மாறாக இஸ்லாமே பாதுகாக்கப்படல் வேண்டும்' எனும் அடிப்படையை முன்னிருத்தியே
வழிதவறிப்போன இயக்கங்களை அது எவ்வளவு மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தாலும்
அவற்றை தயவு தாட்சண்யமின்றி விமர்சித்து வருகின்றோம். சத்தியத்தைப்
பாதுகாக்கும் நோக்கோடு களத்தில் இறங்கி இரவு பகலாகப் பாடுபட்டு வ‌ருகின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்(சிறந்த ந‌ற்கூலியை வழங்க அல்லாஹ் போதுமானவன்)

ஜமாஅத்தே இஸ்லாமி எனும் அமைப்பை நாம் விமர்சிப்பதற்குப் பல காரணங்கள்
நிறைந்திருந்தாலும் பிரதான காரணங்கள் இரண்டு ஆகும்.

முதலாவது காரணம்: ஜமாஅத்தே இஸ்லாமியின் ஸ்தாபகர் மெளலான மெளதூதியை
அவ்வியக்கவாதிகள் கண்மூடிப்பின்பற்றல்.

இரண்டாவது காரணம்: இறைநிராகரிப்பாளரான கொமைனியை இஸ்லாமிய இலட்சியவாதி என அவர்கள்
பறைசாற்றிவருகின்றன‌ர்.

அல்லாஹ்வின் த‌க‌ப்பன் என்ற வாசகத்தை தனது பெயரோடு வைத்துக் கொண்ட‌ மெள‌தூதி.!!

ஆச்ச‌ரிய‌ப்ப‌டுகின்றீர்க‌ளா???
மெள‌லான‌ மெள‌தூதியின் முழுப்பெய‌ர் என்ன‌ தெரியுமா??
'அபுல் அஃலா மெள‌லான‌ மெள‌தூதி' அன்பிற்கினிய‌ அன்ப‌ர்க‌ளே!
மேற்படி வாசகத்தில் 'அபுஃஅஃலா'ஆகிய இரு சொற்கள் இணைக்கப்பட்டுள்ளன! 'அபு' என்றால்
'த‌ந்தை' என்ப‌து பொருளாகும். 'அஃலா' என்றால் 'உய‌ர்வான‌ அல்லாஹ்' என்ப‌து பொருளாகும்.நாம்
அனைவர்களும் தொழுகையின் ஸுஜூதின் போது ஓதும் வாசகம் 'சுப்ஹான ரப்பியல் அஃலா'
என்பதே! இதன் அர்த்தம் என்ன தெரியுமா? 'உயர்வான எனது இரட்சகன் தூய்மையானவன்'
என்பதாகும்.இரு அர‌பு வார்த்தைக‌ளையும் இணைத்தால் 'அபுல் அஃலா' என்று வ‌ரும்.
அப்ப‌டியென்றால் 'அல்லாஹ்வின் த‌க‌ப்ப‌ன்' (நஊதுபில்லாஹ்) என்ப‌து பொருளாகும்.

அல்லாஹ்வுக்கு இணையை கற்பிக்கும் வாசகத்தை த‌ன‌து பெயரிலேயே கொண்டிருந்த ஒரு
ம‌னித‌ர் எப்ப‌டி முஸ்லிம் ச‌மூகத்திற்கு எழுச்சியைக் கொண்டு வ‌ந்திருப்பார்??

ஷிர்க் (இணை) இல்லாத‌ ஒரு ச‌மூக‌த்தை அல்லாஹ்வுடைய‌ தூத‌ர் அன்று ம‌தீனா ந‌க‌ரில்
க‌ட்டியெழுப்பினார்க‌ளே அந்த‌ முன்மாதிரியை விட்டு விட்டு ப‌கிர‌ங்க‌மாக தனது
பெயரிலேயே அல்லாஹ்வுக்கு இணைகற்பித்த‌(ஷிர்க்) மெள‌லாவை ஏன் நீங்க‌ள் க‌ண்மூடித்த‌ன‌மாக‌
பின்ப‌ற்ற‌ வேண்டும்???
ஜ‌மாஅத்தே இஸ்லாமி ச‌கோத‌ர்க‌ளே! சிந்திப்பீர்க‌ளா?

அல்லாஹ்வின் அத்தாட்சியாம் ஷீஆக்கொள்கைப் பிர‌ச்சார‌க‌ர் கொமைனி!!???

அன்பின் ஜ‌மாஅத்தே இஸ்லாமி ச‌கோத‌ர‌ நெஞ்சங்க‌ளே!
உங்க‌ள‌து ப‌த்திரிகையான‌ எங்க‌ள் தேசம், அல்ஹ‌ஸ‌னாத் போன்ற‌ ப‌த்திரிகைகளுக்கு எதிராக‌
ச‌ர்வ‌தேச‌த்தில் குர‌ல் எழுப்பி வ‌ருகின்றோம். ஏன் தெரியுமா? ஆத்திர‌ப்ப‌டாதீர்க‌ள்!
அல‌ட்சிய‌ப்பார்வையோடு நோக்காதீர்க‌ள்! இஸ்லாத்தில் சுவ‌ர்க்க‌த்தைக் கொண்டு
ந‌ன்மாராய‌ம் கூற‌ப்ப‌ட்ட உத்த‌ம‌ ந‌பித்தோழ‌ர்க‌ளை 'காபிர்க‌ள்' என‌ நாகூசாம‌ல் பேசிய‌ க‌ய‌வ‌னான‌
ஈரானைச் சேர்ந்த‌ கொமைனையை 'ஆய‌துல்லாஹ்'(அல்லாஹ்வின் அத்தாட்சி) என‌ வார்த்தைக்கு
வார்த்தை த‌மிழில் எழுதிய‌ இய‌க்க‌ம் ஜ‌மாஅத்தே இஸ்லாமி ம‌ட்டுமே!

ஒரு ம‌னித‌ன் எப்ப‌டி அல்லாஹ்வின் அத்தாட்சியாக இருக்க முடியும்? சிந்தித்தீர்களா??
'ஆய‌த்' எனும் வார்த்தையை சாதார‌ண‌மாக‌ அல்லாஹ்வின் வ‌ச‌ன‌ங்க‌ளுக்குப் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து
அன்றாட‌முள்ள‌ ஒரு வ‌ழ‌க்க‌ம்.இது இவ்வாறிருக்க‌ இஸ்லாத்தைக் கொச்சைப்ப‌டுத்திய‌
இப்பிர்அவ்னை 'இஸ்லாமிய‌ப் புர‌ட்சி வீர‌ன்' என‌ அல்ஹ‌ஸ‌னாத்தும், ச‌ம‌ர‌ச‌மும் முழ‌ங்கிய‌தை
வாச‌க‌ர்க‌ள் ம‌றந்திருக்க‌ மாட்டீர்க‌ள். இதுவெல்லாம் எத‌னை எம‌க்குப் ப‌ட‌ம்பிடித்துக்
காட்டுகின்ற‌து என்றால் ஜ‌மாஅத்தே இஸ்லாமி எனும் அமைப்புக்கு இஸ்லாத்தை அத‌ன்
தூய‌வ‌டிவில் வ‌ள‌ர்க்க‌ வேண்டுமெனும் எண்ண‌ம் துளிய‌ள‌வும் இல்லை என்ப‌தும், த‌ங்க‌ள‌து
ப‌த்திரிகையில் போடுவ‌த‌ற்கு செய்தி இருந்தால் போதுமான‌து என்ப‌வைக‌ளே ந‌ன்கு
புல‌ப்ப‌டும் விட‌ய‌ங்க‌ளாகும்.

அவ்விய‌க்க‌த்தின் பார‌தூர‌ம் தெரியாமல் மார்க்க‌த்தின் அடிப்ப‌டை அம்ச‌ங்க‌ளும்
தெரியாம‌ல் அப்பாவித்த‌ன‌மாக‌ 'முஅஸ்க‌ர் என்றும் ஜ‌ம்இய்யா என்றும்  அஸாபீர் என்றும்
பாடுபடும் இளைஞ‌ர்க‌ளையும், யுவ‌திக‌ளையும் அல்லாஹ் ஒருவ‌னால் தான் நேர்வழிகாட்ட‌
முடியும். த‌வ‌றான‌ கொள்கையைக் கொண்ட‌ அவ்விய‌க்க‌த்தில்
இருந்து இன்றில்லாவிட்டாலும் என்றாவ‌து ஒரு நாள் அச்ச‌கோதர‌ர்க‌ள் ச‌த்திய‌த்தை
நோக்கி வ‌ர‌த்தான் போகின்றார்க‌ள்.
பொறுத்திருந்து பார்ப்போம். இன்ஷாஅல்லாஹ்

மின் கடிதம்

(22 07 2008 அன்று எமது பிரச்சாரகர் மெளலவி ஸஹ்றான்(மஸ்ஊதி)அவர்களின் மின்னஞ்சலுக்கு
மாவனல்லை ஜமாஅத்தே இஸ்லாமி சகோதரர்களால் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கான
பதிலும் அன்பர்களின் நலன் கருதி அதனை இங்கு பதிப்பிக்கின்றோம்.‍)

கேள்வி:

மெளலவி ஸஹ்றான் மஸ்ஊதி அவர்களின் மேலான கவனத்திற்கு அறியத்தருவதானது.

தங்கள் அமைப்பின் இணையத்தளம் மிகவும் நன்றாகத் தொழிற்படுகின்றது. இஸ்லாமிய
விழிப்பூட்டல் நிகழ்வுகளை நடாத்தும் திறமையான அறிஞர்கள் தாருல் அதரில்
இஸ்லாமியப் பிரச்சாரம் செய்கின்றார்கள் எனும் செய்தி மகிழ்ச்சியானதே! இருந்த
போதிலும் தாருல் அதர் இணையதளத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஸ்தாபகர் மெளலான மெளதூதியை
ஏதோ வழிதவறியவர் போல் எழுதியிருந்தது எங்களுக்கு ஆரோக்கியமாகத் தென்படவில்லை.

இப்படி இஹ்வானுல் முஸ்லிமீன் போராட்ட வீரர்களை தமிழுலகிற்கு கொச்சைப்
படுத்திக் காட்டுவதால் தங்களுக்கு என்ன லாபம் என்பதை நாங்கள் அறிய
ஆசைப்படுகின்றோம். இது பற்றி தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு பணிவாய்
வேண்டுகின்றோம்.

இப்படிக்கு

-மாவனெல்லை ஜமாஅத்தே இஸ்லாமி சகோதரர்கள்.

பதில்:

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.தங்களுடைய மின்மடலில் குறிப்பிட்டிருக்கும்
விமர்சனம் உண்மையானதே! நாம் கூறிவரும் சத்தியக் கருத்துக்களை உதாசீனம் செய்யும்
பல சகோதரர்களுக்கு மத்தியில்  நாங்கள் கூறும் கருத்துக்களை ஆய்வுக்கு உட்படுத்த
நீங்கள் முனைந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.

நமது இணையதளத்திலும் வாய்வழிப்பிரச்சாரங்களிலும் துண்டுப்பிரசுரங்களிலும்
இஹ்வானுல் முஸ்லிமீன், ஜமாஅத்தே இஸ்லாமி, எம்.எப்.சீடி போன்ற அமைப்புக்களை
சுட்டிக்காட்டி அவற்றின் தவறான கொள்கைகளை தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு தெளிவு
படுத்தி வருவது உண்மையானதே! இவ்வரிசையில் ஆங்காங்கே மெளலான மெளதூதியின் வழிகேடான
கருத்துக்களில் சிலவற்றைக் குறிப்பிட்டிருந்தோம். தங்களின் நியாயமான
சந்தேகத்திற்கு மதிப்பளித்து சில அடிப்படையான விடயங்களை தங்களின் மேலான
கவனத்திற்குக் கொண்டுவரலாமென நினைக்கின்றேன்.

அன்பின் சகோதரர்களே!

எப்போதும் நமக்கு ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் மீது 'பற்று' தான் இருக்கவேண்டுமே தவிர
'இயக்க வெறி' இருக்கக்கூடாது. இயக்கப் பற்று எமக்கிருந்தால் இயக்கம் தவறும் போது
நாமும் தவறமாட்டோம். இஸ்லாத்தைப் போதிப்பதாகக் கூறும் கனிசமான அமைப்புக்கள்
தங்களது உறுப்பினர்களுக்கு 'பற்றை' ஊட்டுவதற்கு பதிலாக 'வெறியை'அதிகம் ஊட்டியுள்ளன
என்பது யாவரும் அறிந்ததே!

நாம் நமது வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய ஒரே தலைவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)
அவர்கள் மட்டுமே! இதில் மாற்றுக்கருத்துக் கொண்டால் ஒருவன் நிச்சயம் முஸ்லிமாக
இருக்கமுடியாது. இஸ்லாமிய‌ மார்க்க‌த்தில் த‌டுக்க‌ப்ப‌ட்ட‌ குற்ற‌ங்க‌ளில் ஒன்றே
'த‌னிம‌னித‌ வ‌ழிபாடு' இந்த‌த் த‌னிம‌னித‌ வ‌ழிபாடு இன்று ப‌ல்வேறு வ‌டிவ‌ங்க‌ளில்
முஸ்லிம்க‌ளிட‌ம் புகுந்து ந‌பிவ‌ழியை குழிதோண்டிப் புதைத்திருக்கின்ற‌து.
இஸ்லாத்தில் வெறுக்க‌ப்ப‌ட்ட இந்த 'த‌னிம‌னித‌ வ‌ழிபாடு' ஜ‌மாஅத்தே
இஸ்லாமி'அமைப்பின‌ர்க‌ளிட‌ம் இருக்கின்ற‌து. இதை தாங்க‌ள் ம‌றுக்க‌முடியுமா?

அன்பின் சகோதரர்களே!

த‌ங்க‌ளுடைய அமைப்பு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கும் இந்த‌ மெள‌லான‌ மெள‌தூதி யார்?
அவ‌ர் தனது நூலான 'அர்ரஸாயில்' எனும் நூலில் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின்
நம்பகத்தன்மையில் குறைகாணுவதை நீங்களே படித்துப்பாருங்கள்.

நபிகளார்(ஸல்)அவர்களின் வார்த்தைகளில் பொய்யுள்ளதாம் மெளதூதி கூறுகின்றார்!!!

57 سنة ولم يخرج الدجال فدل على أن الرسول لم يكن ظنه صحيحا. كتاب الرسائل والمسائل في ص130قال المودودي: لقد مرت

'இன்றோடு நூற்றி முப்பது வருடங்கள் கழிந்து விட்டன.இன்னும் 'தஜ்ஜால்'
வெளிப்படவில்லை.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றில் நம்பகத்தன்மை இல்லை
என்பதையே இது அறிவிக்கின்றது. (ஆதாரம்:அர்ரஸாயில் வல் மஸாயில்ஐம்பத்தி ஏழாம்
பக்கம்)'

அன்பின் சகோதரர்களே! வாசித்தீர்களா? மெளலான மெளதூதி என்ன கருத்தைக் கூறுகின்றார்
என்பதைக் கவனித்தீர்களா? நாங்கள்  மௌதூதியின் கருத்துக்களை 'வழிதவறியவை' என்று
கூறுகின்றோம் என்றால் வெறும் காழ்ப்புணர்விலோ வேறு பிரச்சனைகளிலோ இல்லை. மாறாக
இஸ்லாத்தின் மீது கொண்ட உண்மையான நேசமே எம்மை இப்படிப் பேச, எழுத வைத்துள்ளது.

நீங்கள் இதனை ஆரோக்கியமற்ற செயலென நோக்கினால் அதற்கு நாங்கள் பொருப்பாளிகளல்ல.
இது அல்லாஹ்வின் சத்திய மார்க்கம். இதில் தனிமனித வழிபாட்டிற்கு அறவே இடம்
கிடையாது. வழிதவறியவர்களை தவறியவர்கள் என்று தான் கூற முடியுமே தவிர
'முஜத்தித்கள்'என்று கூறமுடியாது.

நபிகளாரின் சுய வாழ்வில் அபகீர்த்தியை உருவாக்கும் மேற்படி மெளலானாவின் கருத்து
இஸ்லாத்தின் பார்வையில் ஆரோக்கியமற்றது. இதனை நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ
ஏற்றுத்தான் ஆகவேண்டும். முன்பொரு காலத்தில் இஹ்வான்களை இஸ்லாத்தின்
காவலர்களாகவே நாங்களும் எண்ணி வந்தோம். ஆனால் அவர்களின் உண்மை வரலாறுகளை
அவர்களின் சொந்த நூற்களை வாசித்த போதே தெளிவாகப் புரிந்துகொண்டோம்.
அல்ஹம்துலில்லாஹ்.

இன்னும் சொல்கின்றோம். இஹ்வானுல் முஸ்லிமீன் எனும் அமைப்பு (நமது நாட்டில் என்ன
பெயரில் அவர்கள் இயங்கினாலும்) வழிகேடான கொள்கைகளை கொண்டிருக்கின்றன‌ என்பதற்கு
நிறையவே சான்றுகள் உள்ளன. நீங்கள் விரும்பினால் பொறுமையாக இருந்து ஒவ்வொன்றாக
இஹ்வான்களின் கொள்கைகளைப் படியுங்கள். சத்தியத்திலிருந்து அவர்கள் எவ்வளவு
தூரம் தடம்புரண்டுள்ளனர் என்பதை நீங்களே அறிந்துகொள்வீர்கள்.

இஹ்வானுல் முஸ்லிமீன் எனும் அமைப்பில் சதித்திட்டங்கள் இரகசியக் குழுக்கள் என
பல்வேறு முன்னெடுப்புக்கள் காணப்படுகின்றன. ஹஸனுல் பன்னாவைக் கொன்றதே
இஹ்வான்களின் 'ஜம்இய்யதுத் தன்ளீம் அஸ்ஸிர்ரீ'எனும் அமைப்புத்தான் என்பதற்கு
அடுக்கடுக்கான சான்றுகள் உள்ளன என்பதையும் இங்கு நினைவூட்டுவது சாலப்பொருத்தமென
நினைக்கின்றேன். படியுங்கள். உங்களது தேடலை நீங்கள் தொடர்ந்தால்
சத்தியக்கொள்கையை அழகுறத்தெரிந்துகொள்வீர்கள் எனக்கூறி இம்மடலை முடித்து
விடைபெறுகின்றேன்.

அன்புடன்

அல்ஹாபிழ் :மெளலவி ஸஹ்றான்(மஸ்ஊதி)

பிரச்சாரகர் தாருல் அதர் அத்தஅவிய்யா காத்தான்குடி

email: zahran8686@yahoo.com
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள்
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள்
Srilankamoors.com
Srilankamoors.com
Spreading The Truth Of Islam
Spreading The Truth Of Islam
சிறிலங்கா மூர்ஸ்.காம்
சிறிலங்கா மூர்ஸ்.காம்
இஸ்லாம் தூய வடிவில்
இஸ்லாம் தூய வடிவில்