Answered by Ansar Thablighi
வினா

பிறந்த பிள்ளையின் முடியை இறக்கினால் அதன் நிறைக்கு தர்மம் செய்ய வேண்டுமா?

விடை

பிள்ளை பிறந்த ஏழாம் நாள் முடியை இறக்குவது நபிவழி என்பதற்கு ஆதாரமான
ஹதீஸ்கள் உள்ளது.
ஆனால் அந்த முடியின் நிறைக்கு தங்கத்தை அல்லது வெள்ளியை தர்மம் செய்ய
வேண்டும் என்பதற்கு ஆதாரமான ஹதீஸ்கள் எதுவும் கிடையாது.

பாத்திமா (ரழி) அவர்களிற்கு ஹஸன் ஹுஸைன் (ரழி) அவர்கள் பிறந்த சந்தர்ப்பத்தில்
அவர்களின் முடியை இறக்கி அதன் நிறைக்கு வெள்ளியை தர்மம்; செய்தார்கள் சில
ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது. ஆனால் அவை எதுவும் ஆதாரமான அறிவிப்பாளர்
வரிசையினூடாக இடம் பெறவில்லை.
எனவே ஏழாம் நாள் அகீகாவுடன் முடியை இறக்கினால் மட்டும் போதுமானது,
வெள்ளியையோ தங்கத்தையோ தர்மம் செய்யத் தேவையில்லை.