Answered by Ansar Thablighi
|
வினா
கடினமான மழை வேளையில் அவசியம் ஜமாஅத் தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு
போகவேண்டுமா?
விடை
இக்கேள்விக்கான பதிலை நபி (ஸல்) அவர்களின் நேரடி முன்மாதிரியிலிருந்து
பெற்றுக்கொள்ள முடியும்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கடும் மழையான ஓர் நாளில் முஅத்தினிற்கு
பின்வருமாறு கட்டளையிட்டார்கள்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுள்ளாஹ் எனக் கூறியதும் ஹய்ய அலஸ் ஸலாத் எனக்
கூறாதீர். மாறாக உங்கள் வீடுகளில் தொழுது கொள்ளுங்கள் எனக் கூறுவாயாக.
இந்த செயலை மக்கள் பார்த்து வெறுத்த போது என்னை விட சிறந்த நபி (ஸல்) அவர்கள்
இவ்வாறு செய்துள்ளார்கள் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் (விளக்கமாக)
கூறினார்கள். (புகாரி)
எனவே கடும் மழையான நாட்களில் மக்களை சிரமத்திற்குட்படுத்தாமல் வீடுகளிலே
தொழுது கொள்ளுங்கள் என்பதற்குரிய அறபு வார்த்தையை அதானில் குறிப்படுவதும்
மழையில் நனைந்து சிரமத்துடன் பள்ளிக்கு வராமல் வீட்டிலே தொழுது கொள்வதும்
நபி வழியாகும்.
இவ்வாறே பிரயானத்தில் இருந்த போதும் கடும் குளிரும் மழையுமான இரவில்
அவரவர்களின் இடங்களிலே தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் முஅத்தினிற்கு கூறுமாறு
கட்டளையிட்டார்கள் என இப்னு உமர் (ரழி) அறிவிக்கின்ற செய்தியையும் புகாரி
கிரந்தத்தில் நாம் பார்க்கலாம்.
இது எமது சமுதாயத்தில் விடுபட்ட மறைக்கப்பட்ட அல்லாஹ்வினால் எமக்கு
வழங்கப்பட்ட சலுகையும் நபிகளாரின் வழிமுறையுமாகும்
