Answered by Ansar Thablighi
வினா:

மாதவிலக்குடன் உள்ள பெண்கள் மருதானி கொண்டு அலங்கரிக்கலாமா?


விடை:

இவர்கள் தாராளமாக மருதானி கொண்டு அலங்கரிக்கலாம். இதற்கு எந்த
தடையுமில்லை.
தொழுவது , நோன்பு நோற்பது, உடலுறவு கொள்வது, கஃபாவை தவாப் செய்வது ஆகிய
விடயங்கள் மட்டுமே தடுக்கப்பட்டுள்ளன. இவை தவிரவுள்ள விடயங்களை தாராளமாக
செய்யலாம்.
மாதவிலக்குள்ள பெண் பள்ளியில் தரிக்கலாமா என்பதில்; நேரடி தடை ஆதாரமா
ஹதீஸ்களில் வரவில்லை.
என்றாலும் மறைமுகமாக சில ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும்; அதில்
சர்ச்சை உள்ளது. இதைப்பற்றி விரிவான விளக்கத்தையும் எமது
நிலைப்பாட்டையும் பின்னர் தெரிவிக்கிறோம்.