Answered by Ansar Thablighi
|
வினா
முஆத் (ரழி)அவர்களை நபி (ஸல்) அவர்கள் யமனுக்கு அனுப்பிய போது அல்குர்ஆன்
அல்ஹதீஸில் தான் பெறாத விடயங்களுக்கு சொந்த கருத்தைக் கொண்டு தீர்ப்பு
வழங்குவேன் என கூறினார்களா?
விடை
இவ்வாறான ஓர் செய்தி பரவலாக மௌலவிமார்களாலும் சொல்லப்படுகிறது.
ஆனால் அந்த மௌலவிமார்கள் இந்த செய்தி ஆதாரமானதா ? அல்லது பலயீனமானதா ?
என்பதைப் பற்றி ஆய்வு செய்ய தவறிவிட்டார்கள்.
ஏனெனில் இந்த செய்தி உன்மையில் மிகவும் பலயீனமான செய்தியாகும்.
அதன் விபரம் வருமாறு
இந்த ஹதீதின் அறிவிப்பாளர் வரிசையில் இரண்டு முக்கிய குறைபாடுகள் உள்ளது.
முதலாவது ...
இந்த செய்தி பல கிரந்தங்களில் பதியப்பட்டிருந்தாலும் அது ஒரு மிகவும்
பலயீனமான அறிவிப்பாளர் வாயிலாகவே அனைபேருக்கும் சென்றடைகிறது.
அதாவது முஆத் (ரழி)அவர்களைத் தொட்டும்; அவரின் மாணவர்களில் சிலர் சொன்னதாக
ஹாரித் பின் அம்று என்பவர் இந்த செய்தியை கூறுவதாகவே அனைத்து
கிரந்தங்களிலும் பதிவாகியுள்ளது.
இந்த ஹாரித் பின் அம்று என்ற அறிவிப்பாளர் இமாம் இப்னு அதிய் , இமாம் உகைலி
மற்றும் இமாம் இப்னுல் ஜாரூத் போன்ற ஹதீஸ்கலை இமாம்களால் நம்பகமற்றவர் என
இனங்காட்டப்பட்டுள்ளார்.
இமாம் இப்னு ஹஜர் (றஹ்) அவர்களும் இவரை இனங்காணப்படாதவர் என
குறிப்பிட்டுள்ளார்
இமாம் புகாரி (ரஹ்) இந்த ஹதீஸைப் பற்றி குறிப்பிடும் பொழுது இது ஸஹீஹான
(ஆதாரமான) செய்தி அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஹதீதை அறிவித்த இமாம் திர்மிதி அவர்களே இதன் அறிவிப்பாளர் வரிசையில்
சிலர் விடப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன் என குறிப்பிடுவதன் மூலம் இது
ஆதாரமற்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டாவது
இந்த ஹாரித் என்பவரின் ஆசியரியர் அதாவது முஆத் (ரழி) அவர்களிடமிருந்து
செவியுற்றவர் என வருபவரின் பெயர் எதுவும் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
மாறாக சிலர் சொன்னார்கள் என்றே வந்துள்ளது.
எனவே அவரைப்பற்றிய எந்த தகவலும் இல்லாததால் அவ்வாறானவர்களின் செய்தியை எந்த
ஹதீஸ்கலை அறிஞரும் ஏற்றுக்கொள்வதில்லை.
எனவே இது மொத்தத்தில் மிகவும் பலயீனமான ஆதாரமற்ற, அல்குர்ஆன் ஆதாரமான
ஹதீஸ்களின் வழிகாட்டலிற்கு முற்றிலும் மாற்றமான, ஹதீஸ்கலை அறிஞர்களால்
பலயீனமானது என கூறப்பட்ட நம்பகமற்ற செய்தியாகும் என்பதை புரிந்து
கொள்ளுங்கள்.
ஆய்வற்ற மௌலவிமார்கள் கூறுவதைக் கொண்டு ஏமாந்து விடாதீர்கள்.
