Answered by Ansar Thablighi
بسم الله الرحمن الرحيم

வினா

முஹர்ரம் பிறை 10 ம் நாளில் பல விசேட நிகழ்வுகள் நடந்ததாக மௌலவிமார்கள்
கூறுகிறார்கள். அவற்றின் உன்மைத்தன்மை யாது?

விடை

நபி(ஸல்) அவர்களினால் ஒரேயொரு விடயம் மட்டுமே இவைகளில்
உன்மைப்படுத்தப்பட்டுள்ளதை ஆதாரமான ஹதீதுகளில் நாம் காணலாம்.

அதுதான் நபி மூஸா (அலை ) அவர்களை பிர்அவ்னின் தீங்குகளிலிருந்து அல்லாஹ்
காப்பாற்றியது. இதற்காகவே முஹர்ரம் பிறை 10 ல் அல்லாஹ்விற்கு நன்றிசெலுத்தும்
முகமாக நோன்பு நோற்பது சுன்னத்தாக்கப்பட்டுள்ளது.

மேலும் யஹுதிகளும் இந்த நாளில் நோன்பு நோற்பதால் அவர்களுக்கு மாறுசெய்யும்
முகமாக பிறை 09 ம் நாளிலும்  அதனுடன் சேர்த்து  நோன்பு நோற்பதை நபி (ஸல் )
அவர்கள் மாரக்கமாக்கினார்கள்.

இது தவிர சொல்லப்படும் அனைத்து விடயங்களும் ஆதாரமற்ற செய்திகளாகும்.
அவைகளைக்
கூறுவதும் அதை நம்புவதும் அல்லாஹ்வின் பெயரில் பொய் கூறுவதாக மாறிவிடும்.

மேலும் முஹர்ரம் பிறை 10 ல் ஹுஸைன் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டதால் அந்த நாளை
ஓர் துக்க தினமாக எடுத்துக் கொள்வதும் அந்த தினத்தில் அன்னதானம் வழங்குவதை
மார்க்கமாக்கிக் கொள்வதும் வழிகேடான பித்அத்தான காரியமாகும்.

இக்காரியங்களையும் இன்னும் பல வணக்க வழிபாடுகளையும் அனுஷ்டானங்களையும் |ஷீஆ
எனும் வழிதவறியவர்கள் முஹர்ரம் 01 முதல் 10 ம் தினம் வரை கடைப்பிடித்து
வருகிறார்கள். இதற்கும் பரிசுத்தமான இஸ்லாத்திற்கும் எவ்வித சம்மந்தமும்
இல்லை.

அது போன்ற காரியங்களை நாம் கானும் பட்சத்தில் அவற்றின் பாவங்களை எடுத்துக்
கூறி தடுக்க முயற்சி செய்ய வேண்டும். முடியாத பட்சத்தில் அவைகளிலிருந்து
விலகிக் கொள்ள வேண்டும்.