Answered by Ansar Thablighi
வினா

நபி (ஸல்) அவர்கள் 06 மாதங்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டார்களா?

விடை

நுபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட செய்தி ஆதாரமான ஹதீஸ்களில்
வந்திருந்தாலும் 06 மாதங்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்ற செய்தி;
பலயீனமானதாகும்.

இந்த செய்தி முஸ்னத் அஹ்மத் என்ற கிரந்தத்தில் பதியப்பட்டுள்ளது. ஆனால் இந்த
செய்தி ஆதாரமற்ற ஹதீதுகளின் ஒரு வகையான ஸாத் என்ற வகையைச் சேர்ந்ததாகும்.

இந்த செய்தியை மஃமர் என்பவர் ஹிஸாம் என்பவர் சொன்னதாக  அறிவிக்கின்றார்.
ஆனால் இதே ஹிஸாம் என்பவரிடம் இருந்து சூனியம் செய்யப் பட்ட செய்தியை
அறிவிக்கக்கூடிய ஏனைய நம்பகமாக 10 அறிவிப்பாளர்கள் அவ்வாறு 06 மாதங்கள்
பாதிக்கப்ட்டார்கள்  எனக் குறிப்பிடவில்லை.

ஏனைய நம்பகமானவரகள் கூறாத செய்தியை இவர் மட்டும் ஏன் கூறுகிறார் என்பதைப்
பற்றி ஆய்வு செய்த போது அதிலுள்ள குறை தெரியவருகின்றது.

அதாவது இதை அறிவித்த மஃமர் என்பவர் நம்பகமானவராக இருந்தாலும் ஹிஸாம்
என்பவரைத் தொட்டும் அறிவிக்கக்கூடிய செய்திகளில் தவறுதலாக அறிவிப்பவர் என
இனங்கானப்பட்டுள்ளார்.

இதைப்பற்றி ஆய்வுசெய்த ஹதீஸ்கலை மேதாவி இமாம் யஹ்யாவும் அவரைத் தொடர்ந்து  
இமாம் இப்னு ஹஜர் மற்றும் சிலரும்  தெளிவாகாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அதனடிப்படையில் இந்த 06 மாதங்கள் என்ற செய்தி மஃமருடைய தவறான அறிவிப்பாகும்.

எனவே இந்த பலயீனமான செய்தியை நம்பி அதனடிப்படையில் தங்கள் பிரச்சாரத்தை
சிலர் முன்னெடுக்கின்றார்கள். அது அவர்களின்  அறியாமையாகும் என்பதை புரிந்து
கொள்ளுங்கள்.