நோன்பை பிடித்த நிலையில் பல் துலக்கலாமா?
நோன்புடன் பல் துலக்கக்கூடாது என்பதற்கு எவ்வித
ஆதாரமுமில்லை. மாறாக நபி (ஸல்) அவர்கள் அதிகமதிகம் எல்லாக்
காலங்களிலும் பல் துலக்குகின்றவர்களாகவே
இருந்துள்ளார்கள்.
'நோன்பாளியின் வாய்வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின்
வாசத்தை விட மணமானதாயிருக்கும் ';
என்ற நபிமொழியை ஆதாரமாகக் கொண்டு வேண்டுமென்றே பல்
துலக்காமல் வாயை நாறவிடுவது அறியாமைகும்.
பொதுவாக நோன்புடன் உள்ள போது வாய்க்குள் ஆகாரங்களை
எடுக்காததன் காரணமாக வாய்வாடை அதிகமாக இருக்கும் .
என்றாலும் அல்லாஹ்விடத்தில் மணமானதாகவே அது இருக்கும்
என்பதை எடுத்துக் காட்டுவதற்காவே இது சொல்லப்பட்டுள்ளது
என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நோன்பை பிடித்த நிலையில் பல் துலக்கலாமா?
Answered by Ansar Thablighi
|