Answered by Ansar Thablighi
வினா

நான் ஒரு பெண்னை திருமணம் செய்து கொண்டேன். ஆனால் சட்டப்படி அரசாங்க
பதிவேடுகள் எதிலும் அதை பதிவு செய்யவில்லை. மாறாக பெண்ணின் தகப்பன் இருவர்
முன்னிலையில் வலி சொன்னார். இந்த நிலையில் எங்களுக்குள் உறவு
ஏற்பட்டுவிட்டது. இதே வேளை எங்களுக்கிடையில் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக
நாங்கள் இருவரும் பிரியவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நான்
விவாகரத்து செய்வதன்றால் சட்டப்படி பதியாத இத்திருமணத்தில் நான் என்ன செய்ய
வேண்டும்.?


விடை

அரச சட்டப்படி பதியப்படாவிட்டாலும் இஸ்லாமிய ரீதியில் இத்திருமணம் சரியானதே.
அதைப் போன்றே இரண்டு சாட்சிகள் அறிய விவாகரத்தையும் செய்து கொண்டால்
அப்பெண் அதற்கான இத்தாவை கடைப்பிடிப்பது அவளின் மீது கடமையாகிவிடும்.
அரச பதிவுகளில் பதிவுசெய்தால்தான் அது திருமணம் எனக் கருதுவது எமது
அறியாமையாகும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனை ஆயிரம் திருமணங்கள்
நடந்தேறின. அவை எதனையும் எந்த அரசப் பதிவேடுகளிலும் அவர்கள் பதியவுமில்லை.
அவ்வாறு கட்டளையிடவுமில்லை. அதேபோன்று விவாகரத்துகளும் நிறைய நிகழ்ந்தது.
அவைகளும் சட்டப்படியென நாம் கூறுகின்ற விதத்தில் பதியப்படவில்லை.
எனவே இப்பதிவுகளெல்லாம் நாம் வாழுகின்ற நாட்டிலுள்ள சில சட்டங்களினால்
நமக்கு ஏற்பட்ட தேவைதானே தவிர மார்க்க சட்டத்;திற்கும் அதற்கும் எந்த
சம்பந்தமுமில்லை. இந்த சட்டங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடலாம். எனினும்
அல்லாஹ்வின் சட்டப்படியே எமது மார்க்க காரியங்களை நாம் கடைப்;பிடிக்க
வேண்டும்.

குறிப்பு...

விவாகரத்தின் சட்டங்களை ஓரளவு தெரிந்து கொள்ள சூரதுத் தலாகின்
மொழிபெயர்ப்பை ஆரம்பத்திலிருந்து வாசித்துப் பார்க்க.