
| Answered by Ansar Thablighi |
| வினா: பெண் பிள்ளைக்கு கத்னா செய்வது அவசியமா? விடை: ஆண்களுக்கு கத்னா செய்வதை வலியுறுத்தி தெளிவாக ஹதீதுகளில் வந்துள்ளதைப் போன்று பெண்கள் விடயத்தில் நேரடியாக வரவில்i என்றாலும் பெண்களுக்கு கத்னா இருக்கிறது எனவும் புரியக்கூடிய முஸ்லிம் கிரந்தத்தில் இடம் பெறக்கூடிய ஓர் ஹதீஸின் அடிப்படையில் சில இமாம்கள் பெண்களுக்கு கத்னா செய்வது விரும்பத்தக்க காரியம் எனக் கூறியுள்ளனர். என்றாலும் அந்த ஹதீஸிற்கு வேறு விளக்கங்கள் அறபிப் பாசையையின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே அல்லாஹ்வின் அழகான படைப்பில் கத்திவைப்பதற்கு முன் அதற்n;கன சர்சையற்ற இருகருத்திற்கு இடமில்லாத ஓர் ஆதாரத்தை பெறவேண்டும். அவ்வாறான ஓர் ஆதாரத்தை நாம் பெறாததால் பெண்களுக்கு கத்னா செய்வதை நாம் சுன்னாவாகக் கருதவில்லை. அல்லாஹ்வே மிக அறிந்தவன். என்றாலும் இது தொடர்பாக தெளிவாக வரக்கூடிய சில செய்திகள் உள்ளன. அவைகள் பலஹீனமான செய்திகளாகும். ஆதாரமாகக் கொள்ள முடியாது. |