
| Answered by Ansar Thablighi |
| வினா: பிள்ளைகள் பிறந்தால் அவர்களின் முடியை சிரைத்து அதன் நிறைக்கு தங்கம் வெள்ளியை தர்மம் செய்ய வேண்டுமா? விடை: பிள்ளைகள் பிறந்தால் ஏழாம் நாள் முடியை சிரைப்பது மட்டுமே ஆதாரமான நபிவழியாகும் . அம்முடியின் நிறைக்கு வெள்ளியை தர்மம் செய்வது தொடர்பாக வரக்கூடிய அனைத்து செய்திகளும் பலஹீனமான ஆதாரமற்ற ஹதீஸ்களாகும். இந்த செய்திகளின் அடிப்படையிலேயே தங்கத்தை தர்மம் செய்யும் வழக்கத்தையும் உருவாக்கிக் கொண்டார்கள். எனவே ஆதாரமற்ற செய்திகளை விட்டு விட்டு ஆதாரமான ஹதீஸ்களில் வருவதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வோம். |