Answered by Ansar Thablighi
|
வினா
தாயின் கால்பாதத்தின் கீழ் சுவனம் உள்ளது எனும் ஹதீஸ் ஆதாரமானதா?
விடை
இந்த கருத்தில் பரவலாக எல்லோராலும் ஒரு ஹதீஸ் சொல்லப்பட்டுவருகின்றது.
இந்த ஹதீஸை பல இமாம்களும் மிகப் பலயீனமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஏனெனில் இந்த செய்தி எந்த ஓர் கிரந்தத்திலும் நம்பகமான அறிவிப்பாளர்
வரிசையினூடாக இடம் பெறவில்லை.
எனவே இந்த செய்தி மௌலவிமார்களால் மிம்பர்களில் அதிகமாக சொல்லப்பட்டாலும்
ஆதாரமற்ற செய்தியாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .
மேலும் பலயீனமான ஹதீதை நபி (|ஸல்) அவர்கள் கூறியதாக கூறுவதும் குற்றமாகும்.