Answered by Ansar Thablighi
|
வினா
திருமணப் பதிவு முடிந்தவுடன் வலீமா கொடுக்கலாமா?
விடை
திருமணம் செய்த ஆண் வலீமா கொடுக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதை
ஆதாரமான ஹதீதுகளில் நாம் காணலாம்.
ஆனால் அந்த வலீமா விருந்தை உடலுறவின் பின்னரா அல்லது வலிசொன்னதின் பின்னர்
உடலுறவிற்கு முன்னரா கொடுப்பது என்பதைப்பற்றி எவ்வித வார்த்தையும்
நேரடியாக நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நாம் எந்த செய்தியையும் ஆதாரமான
ஹதீதுகளில் காணவில்லை.
என்றாலும் நபி (ஸல்) அவர்கள் வலீமா விருந்து கொடுத்த முறையை அவதானிக்கும்
போது மனைவியுடன் சந்தோசமாக இருந்த பின்னரே கொடுத்திருப்பதை சைனப்,ஸபிய்யா
(ரழி) அவர்களின் திருமணத்தில் அவதானிக்கலாம்.
இவர்களின் செய்திகளை புகாரி கிரந்தத்தில் காணலாம்
இதற்கிடையில் மனைவியுடன் தங்கிய அந்த இரவுகளில் அவ்விருவருக்குமிடையில்
உடலுறவு நடந்துமிருக்கலாம் அல்லது நடக்காமலுமிருக்கலாம்.
அதைப்பற்றிய செய்தி தெளிவாக வரவில்லை. என்றாலும் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக
தங்கிய பின்னரே வலீமா கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவான விடயமாக உள்ளது.
எனவே எந்த ஒரு ஹதீதிலும் வலி சொல்லப்பட்ட உடன் மனைவியுடன் தங்காமல் வலீமா
கொடுக்கப்பட்டதாக வராததால் அம்முறையை தவிர்ந்து கொள்வோம்.
நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று மனைவியுடன் தங்கிய பின் வலீமா கொடுப்பது
சர்ச்சை இல்லாத சுன்னாவாக இருப்பதால் அம்முறையை நபிகளாரைப் போன்று
கடைப்பிடிப்போம்.
தேவையற்ற வாதங்களை விடுவதுடன் குதர்க்கமான கேள்விகளையும் தவிர்ந்து
கொள்வோம். சொந்த கருத்துகளை தவிர்ப்பதுடன் சுன்னாவில் இருப்பதை
கடைப்பிடிப்போம்.