வணக்க வழிபாடு

வினா :
ருகூவிலும், சுஜுதிலும் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்யும்
போது எத்தனை விடுத்தங்கள் கூற வேண்டும்.

விடை:
அதிகமானவர்கள் மும்மூன்றுமுறை
ருகூவிலும், சுஜுதிலும் அல்லாஹ்வைத் துதிப்பதைக்
காண்கின்றோம். அவ்வாறு நபிகளார் மூன்று விடுத்தம்
செய்யததாக சில ஹதீதுகள் வந்தாலும் 'அந்த மூன்று
விடுத்தம்' என்ற வார்த்தை பலஹீனமான ஆதாரமற்ற
செய்தியாகும்.

உறுதியான அறிவிப்பாளர் வாயிலாக மூன்று விடுத்தம் என்ற
செய்தி சுட்டிக்காட்டப் படவில்லை. எனவே பர்ளான
தொழுகையை இமாமுக்குப் பின் தொழும் வேளையில் இமாம்
தலையை உயர்த்தும் வரை எத்தனை விடுத்தங்களும் நாங்கள்
அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டே இருக்கலாம்.

அவ்வாரே வீட்டில் தனிமையில் தொழக்கூடிய பெண்களும்
பர்ளான தொழுகையாயினும் சுன்னத்தான தொழுகையாயினும்
தாம் விரும்பிய அளவிற்கு ருகூவிலும், சுஜுதிலும்
அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருக்க முடியும்.

சில அறிஞர்கள் 'மூன்று விடுத்தம்' என்ற வார்த்தையை
ஆதாரமானதாக குறிப்பிட்டிருந்தாலும் எமது
ஆய்வில் அதனை பலஹீனமானதாகவே காண்கின்றோம்.

எனவே ஒற்றையாகவோ , இரட்டையாகவோ எத்தனை விடுத்தமும்
துதித்துக் கொள்வோம். ஓற்றைப்படத்தான் என்ற
அவசியமும் கூறப்படவில்லை.
அல்லாஹ் மிக அறிந்தவன்'
Answered by Ansar Thablighi