Answered by Ansar Thablighi
|
வினா
வுழு செய்யும் போது தலையில் சில பகுதியை தடவினால் பெண்களுக்கு போதுமா?
விடை
தலையை மஸ்ஹுசெய்யும் விடயத்தில் பெண்களுக்கான பிரத்தியேகமான எந்ந விடயமும்
நபி (ஸல்) அவர்களால் குறிப்பிடப்படவில்லை.
ஆண் தலையை தடவுவது போண்றே பெண்ணும் தடவிக் கொள்வாள்.
தனது இரு கைகளிலும் தண்ணீரைப் படுத்தி அவ்விரண்டையும் தலையின்
முன் பகுதியில் வைத்து பின்னோக்கி பிடரி வரை கொண்டு செண்று பின் அவ்விரு
கையையும் ஆரம்பித்த இடத்திற்கு அவ்வாறே தடவிய நிலையில் முன்னோக்கிக்
கொண்டுவர வேண்டும் .
அல்லது பின்பகுதியில் ஆரம்பித்து முன்னோக்கி கொண்டுவந்து பின்
பின்னோக்கி ஆரம்பித்த இடத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்.
இவ்வாறு தலை முழுவதையும் தடவுவதே ஆதாரணமான ஹதீதுகளில் புகாரி முஸ்லிம்
கிரந்தங்களில் வந்திருப்பதை நாம் காணமுடியும். இதில் ஆண் பெண் என்ற எந்த
வேறுபாடும் கிடையாது.
இதேவேளை தலையில் தலைப்பாகை போண்ற எதையும் ஆணும் ஸ்காப் போண்றதை பெண்ணும்
அணிந்திருந்தால் அவற்றை கழற்றாமல் தலையின் முன்னெற்றி முடியில் தடவிவிட்டு
தொடர்ந்து தலைப்பாகை ஸ்காப் போண்றதன் மீது தலைக்குட்பட்ட பகுதியில்
முழுமையாக தடவ வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தலைப்பாகை அணிந்திருந்த போது அவ்வாறு செய்துள்ள செய்தியை
முஸ்லிம் கிரந்தத்தில் காணலாம்.
இதற்கு மாற்றமாக தலையின் முன்முடிகள் சிலதை மட்டும் தடவிக் கொள்வது
நபிவழிக்கு முற்றிலும் மாறான காரியமாகும். மேலும் வுழு நிறைவானதாகவும்
ஆகிவிடாது.
எனவே மௌலவிமார்களைக் கண்டோ அல்லது அறியாதவர்களின் செயல்களைக் கண்டோ
ஏமாறாதீர்கள்.