| திருக்குர்ஆனை ஓதுவோருக்கு பெருமானார் அளித்த நற்செய்தி.. |
| மறுமை நாளில் (குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்த)வரிடம் குர்ஆனிய தோழர் ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பீரோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும். என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரழி) நூல்: அபூதாவுத், திர்மிதி. குர்ஆனை ஓதிய தோழர் மறுமை நாளில் வருவார் அப்போது குர்ஆன் 'இறைவா! இவருக்கு ஆடையை அணிவி' என்று சொல்லும் அப்போது அவருக்கு உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படும். பிறகு குர்ஆன் 'இறைவா! இவருக்கு (உன் அருளை) அதிகப்படுத்துவாயாக! என்று சொல்லும். அப்போது அவருக்கு உயர்ந்த சீருடை அணிவிக்கப்படும். பிறகு குர்ஆன் இவரை பொருந்திக் கொள்ளுமாறு சொல்லும் அவரை இறைவன் பொருந்திக்கொள்வான். அம்மனிதரிடம் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக அவர் ஓதுகிறபோது ஒவ்வொரு வசனத்திற்கும் ஒரு நன்மை அதிகப்படுத்தப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்கள் : திர்மிதி, இப்னுகுஸைமா குர்ஆனை ஓதுகிறபோது ஏதோ மந்திரத்தை படிப்பது போல படிக்காமல் அதனை நிறுத்தி நிதானமாக அதனுடைய உச்சரிப்போடு ஓதவேண்டும். அப்போதுதான் அதனுடைய நன்மைகள் வழங்கப்படும் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே ஓதுவோர் ஓதும் ஒழுங்கை கவனத்தில் கொள்ளவேண்டும். |

| இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள் |
| இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள் |