பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்புவதென்ன........
நபிமார்களில் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு (இறைவனால்) அற்புதங்களில் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அவ்வற்புதங்களை
நபிகாலத்து மக்கள் (மட்டும்) ஈமான் கொண்டனர். (ஆனால் பின்தோன்றல்கள் நிராகரித்து விட்டனர்) எனக்கு
வழங்கப்பட்டதெல்லாம் அல்லாஹ் எனக்கு அறிவித்த வஹியாகும். கியாமத் நாளில் வஹி (எனும் குர்ஆன்) ஐ
பின்பற்றக்கூடியவர்கள் பெரும்பாண்மையினராக இருக்க விரும்புகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)

நூல் : புஹாரி.


நபிகளால் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட அற்புதங்களில் மாபெரும் அற்புதம்தான் குர்ஆன். குர்ஆனை ஓதி அதனடிப்படையில்
வாழ்வியலை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் சமுதாயத்தின் மீதுள்ள நபிகளாரின் ஆதங்கம். இதனையே பெருமானார் (ஸல்)
அவர்கள் தமது மரணத் தருவாயில் வஸிய்யத் செய்தார்கள்.


தல்ஹா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நான் அப்துல்லாஹ் பின் அபீ அவுஃபாவிடம் சென்று நபி (ஸல்) அவர்கள் ஏதாவது
வஸிய்யத் செய்தார்களா? என்று கேட்டேன் அதற்கு அவர்கள் இல்லை என்றார்கள் அப்படியென்றால் எப்படி மக்களுக்கு நபி (ஸல்)
அவர்கள் வஸிய்யத் செய்தார்கள்? வஸிய்யத் செய்யாததையா மக்கள் ஏவப்பட்டுள்ளார்கள் என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள்
அல்லாஹ்வின் வேதத்தையே (மரண சாசனம்) வஸிய்யத் செய்தார்கள் என்று கூறினார்.

நூல் : புஹாரி
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள்
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள்
Srilankamoors.com
Srilankamoors.com
Spreading The Truth Of Islam
Spreading The Truth Of Islam
சிறிலங்கா மூர்ஸ்.காம்
சிறிலங்கா மூர்ஸ்.காம்
இஸ்லாம் தூய வடிவில்
இஸ்லாம் தூய வடிவில்