தர்மத்தை பகிரங்கமாகச் செய்தல்.
பகலின் ஆரம்ப நேரத்தில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும் போது செருப்பு அணியாத, போதிய ஆடையில்லாத ஒரு
கூட்டத்தினர் வந்தனர். கோடு போட்ட கம்பளியை அல்லது பெரிய ஆடையை அணிந்திருந்தனர்.
வாட்களைத்தொங்கவிட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் முழர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இன்னும்
சொல்வதாயின் அவர்களனைவரும் முழர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்களின் வறுமையைக் கண்டதும் நபி(ஸல்) அவர்களின் முகம் மாறிவிட்டது. உடனே தமது வீட்டிற்குச் சென்று பின்னர் வெளியே
வந்து பிலால் (ரழி) அவர்களை பாங்கு சொல்லுமாறு கூறினார். அவர்கள் பாங்கு சொல்லி இகாமத் சொன்னார்கள். நபி(ஸல்)
அவர்கள் தொழுவித்தார்கள். உங்களின் இறைவனுக்கு அஞ்சுங்கள். அவன் தான் உங்களை ஓர் ஆத்மாவிலிருந்து படைத்தான்.
மேலும் அதே ஆத்மாவிலிருந்து அதனுடைய துணையைப் படைத்தான்.

மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான். மேலும் எந்த அல்லாஹ்வின்
பெயர் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமையைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்.
மேலும் இரத்த பந்த உறவுகளைச் சீர் குலைப்பதை விட்டும் விலகி வாழுங்கள். திண்ணமாக அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக்
கொண்டிருக்கிறான் (59:18) என்ற வசனத்தையும்

இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும் ஒவ்வொரு மனிதனும் நாளைய தினத்திற்கு எதனைத் தயார்
செய்து வைத்திருக்கிறான் என்று பார்க்கட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணமிருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள்
அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் அறிபவனாக இருக்கிறான் (59:18) என்ற வசனத்தையும் ஓதி, யாரேனும் தர்மம் செய்யுங்கள். தமது
தீனாரை, திர்ஹமை, ஆடையை, ஒரு ஸாஉ கோதுமையை, ஒரு ஸாஉ பேரித்தம் பழத்தை, ஏன் பாதி பேரித்தம் பழத்தையாவது தர்மம்
செய்யுங்கள் என்று கூறினார்கள்.

உடனே அன்ஸார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் கையால் தூக்கமுடியாத (கனத்த) ஒரு பையைக் கொண்டு வந்தார். அதைத்
தொடர்ந்து மக்களும் ஒருவர் பின்னால் ஒருவராக கொடுக்கலானார்கள். இறுதியில் உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகளின்
இரு(பெரும்) குவியலையே கண்டேன். மேலும் நபி(ஸல்) அவர்களின் முகம் பொன்னைப் போல் பிரகாசிப்பதையும் கண்டேன்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இஸ்லாத்தில் யார் ஒரு அழகிய நடைமுறையை ஏற்படுத்துகிறாரோ அவருக்கு அதற்கான
கூலியும், அவருக்குப் பின்னால் யாரெல்லாம் அதை மேற்கொள்கின்றாரோ அவர்களுடைய கூலியும் சற்றும் குறையாமல்
கிடைக்கும். யார் இஸ்லாத்தில் தீய நடைமுறையை ஏற்படுத்துகின்றாரோ அவருக்கு அதற்கான பாவமும், அவருக்குப் பின்னால்
யாரெல்லாம் அதை மேற்கொள்கிறாரோ அவர்களது பாவமும் குறையாமல் கிடைக்கும்.

                                                                                                               
       அறிவிப்பவர் : ஜரீர் (ரழி) நூல் : முஸ்லிம்.
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள்
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள்
Srilankamoors.com
Srilankamoors.com
Spreading The Truth Of Islam
Spreading The Truth Of Islam
சிறிலங்கா மூர்ஸ்.காம்
சிறிலங்கா மூர்ஸ்.காம்
இஸ்லாம் தூய வடிவில்
இஸ்லாம் தூய வடிவில்